நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்து புதிய கட்டண கட்டமைப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி சாதாரண வகுப்பில் 215 கிலோ மீட்டர் தூரம் குறைவான பயணங்களுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. ஆனால் 215 கிலோ மீட்டர் மேற்பட்ட பயணங்களுக்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது. 

Advertisment

அதேபோல் விரைவு ரயில்களில் 215 கிலோ மீட்டர் மேற்பட்ட பயணங்களுக்கு1 கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் 1 கிலோமீட்டர் பயணத்துக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண விலை உயர்த்தப்படவில்லை. 

Advertisment

இந்த டிக்கெட் கட்டண உயர்வு குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்ததால் ரயில்வே துறைக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. குறிப்பாக 2024-25ஆம் ஆண்டில் ரூ. 2.63 லட்சம் கோடி மொத்தம் செலவாகியுள்ளது. இதன் காரணமாகவும் அதிகரித்த செலவை ஈடுகட்டும் விதமாகவும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் ” என்றுள்ளது. மேலும் ரயில்வே நிர்வாகத்தில் மனித வள செலவு ரூ.1.15 லட்சம் கோடியும், ஓய்வூதிய செலவு ரூ.60,000 கோடியும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.