கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது காரைக்காலில் இருந்து வந்த ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் ஐந்து பேர் அந்த பேருந்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலும் ஓடும் பாதையிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.