Train fare hike to take effect from today
நாடு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ரயிலில் சாதாரண வகுப்பில் 215 கி.மீ தூரம் வரை பயணிப்பதற்கு எந்த கட்டணமும் இல்லை என்றும், 215 கி.மீ மேல் ஒவ்வொரு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா, மெயில், ஏசி இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கி.மீக்கு 2 பைசா என உயர்த்தப்படவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதே போல், அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் 1 கி.மீ பயணத்துக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், 500 கி.மீ வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண விலை உயர்த்தப்படாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று (26-12-25) அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us