Tragedy continues; 14 Tamil Nadu fishermen arrested Photograph: (rameshwaram)
ராமேஸ்வரம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது காலையிலேயே மீண்டும் பரபரப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அண்மையில் கூட 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் ராமேஸ்வரம் அருகே ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டி கடையை கடல் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us