Tragedy caused by a horrific accident at Buses collide head-on in tenkasi
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து செங்கோட்டை நோக்கி இன்று காலை (24.11.25) கிளம்பிய தனியார் பேருந்து ஒன்றும் அதேசமயம் தென்காசியிலிருந்து கோவில்பட்டி செல்கிற தனியார் பேருந்தும் அந்தந்த சென்டர்களில் உள்ள பயணிகளை மொத்தமாக ஏற்றும் நோக்கத்தில் படு வேகமாக வந்திருக்கின்றன. இதனிடையே, இன்று காலை லேசான மழை தூறியதால் தென்காசி சாலையும் வெறிச்சோடியாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு பேருந்துகளும் எதிரும் புதிருமாக காலை சுமார் 10.50 மணிக்கு படு வேகமாக வந்து கொண்டிருந்த போது கடையநல்லூரையடுத்த அச்சம்பட்டி அருகேயுள்ள துரைச்சாமியாபுரம் மெயின் சாலையில் நேருக்கு நேர் கோரமாக மோதியிருக்கிறது. மோதிய வேகத்தில் இரண்டு பேருந்தின் முன் பக்கம் அப்பளமாக நொறுங்கியது. இந்த மோதலில் இரண்டு பேருந்திலுள்ள பயணிகளும் சிக்கிக்கொண்டதாலும், ஏற்பட்ட படுகாயத்தாலும் அலறியிருக்கிறார்கள். இதனால், அந்த சாலையே கதறலெடுக்க, விபத்தில் 5 பெண்கள் ஒரு ஆண் என 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்கள். பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள், உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தென்காசி எஸ்.பி. அரவிந்த், மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மீட்புப் படைகள் விரைந்து வந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டனர். இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு கடுமையான தலைக்காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை
அதிகமாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
Follow Us