வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் பெற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடிக்கிறது. வாக்காளர்கள் தடுமாறி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாத்துரை (65) குடும்பத்தினருக்கு வாக்காளர் திருத்த படிவம் கொடுத்துள்ளனர். விண்ணப்பத்தில் புதிய புகைப்படம் ஒட்ட வேண்டும் என்பதால் இன்று அய்யாத்துரை தனது மகள் கௌசல்யா (26) உடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பேராவூரணிக்கு போட்டோ எடுக்கச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது, நாட்டாணிக்கோட்டை அருகே செல்லும் போது சேதுபாவாசத்திரம் சென்ற மினிபஸ் மோதியதில் அய்யாத்துரை மற்றும் அவரது மகள் கௌசல்யா இருவரும் படுகாயமநை்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அய்யாத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.