மின் கம்பி மீது புளியமரம் சாய்ந்து விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிதம்பரம் அருகே சி சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதில் இன்று (23-11-25) மதியம் பெய்த மழை மற்றும் காற்றால் சி. சாதமங்கலம் கிராமத்தில் அருந்ததியர் தெருவில் உள்ள புளியமரம் திடீரென சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பி மீது விழுந்தது.  

Advertisment

இந்த மரம் அருகே இருந்த வீட்டின் மீது சாய்ந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில்  அந்தோணியின் மகன் மரியம்சூசை அவரது மனைவி பிளவுன்மேரி, ரோசாப்பூ மனைவி வனதாஸ்மேரி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர்.  இவர்கள் அனைவரையும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சி.சாத்தமங்கலம் கிராமத்தில் திடீரென 3 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.