தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் இன்று மாலை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் உறவினர்கள் முத்துலெட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான சுமத்திரன், முகில் மற்றும் மற்றொரு பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார்.
அந்த இருசக்கர வாகனம் குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு சுற்றுலா வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் என ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு சென்று உடலை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/15/thooacc-2026-02-15-23-05-36.jpg)