Tragedy befalls the owner before the Avaniyapuram Jallikattu competition
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (15-01-26) தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
முதல் சுற்றில் விறுவிறுப்பாக காளைகளை வீரர்கள் பிடித்து தழுவி களம் கண்டு வருகின்றனர். இந்த போட்டியை அங்குள்ள மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இன்று நடைபெறும் இப்போட்டியில், 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. அதன் திமிலை பிடிக்க களமாட 550 காளையர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்ற சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, போட்டிக்கு அழைத்து வரப்பட்டிருந்த காளை முட்டி காளை உரிமையாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இன்று அதிகாலை முதல் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது அழைத்து வரப்பட்டிருந்த காளை ஒன்று, உரிமையாளர் மீது முட்டியது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
Follow Us