Tragedy befalls the head constable who returned home after work Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ் (43). இவர் திருக்கோகர்ணம் காவலர்கள் குடியிருப்பில் தங்கி உள்ளார். இன்று செவ்வாய் கிழமை காலை பணிக்குச் சென்றவர் மாலை பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புறநகர் பண்ணை அருகே வந்த போது பைக் நிலை தடுமாறி பள்ளத்தில் இறங்கி அந்த பகுதியில் உள்ள மரத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் காவலர் சதீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.