சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 65 வயதான பெரியம்மா மற்றும், 70 வயதான பாவாயி ஆகிய இரு மூதாடிகளும் கல்குவாரி அருகே ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர். ஆனால், இரவு நேரமாகியும் இரு மூதாட்டிகளும் வீடு திரும்பவில்லை. அதே சம்யம் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளது இதனால் சந்தேகமடைந்த இரு மூதாட்டின் வீட்டை சேர்ந்தவர்களும் சுற்றும் முற்றும் தேடி பார்த்துள்ளனர். ஆனால், இருவரும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக மகுடஞ்சாவடி போலீஸீல் புகார் அளித்துள்ளர்.
இந்த சூழலில் அடுத்தநாள் காலை, கல்குவாரியில் இரு மூதாட்டிகளின் சடலம் மிதப்பதாக மகுடஞ்சாவடி காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற, இருவரது உடலையும் மீட்டனர். அப்போது மூதாட்டிகள் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் உடம்பில் தாக்கபட்ட காயங்களும் இருந்திருக்கிறது. அதனடிபடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை, இரு மூதாட்டிகளின் தனிமையில் இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவர் இருவரையும் அடித்துகொன்று கல்குவாரியில் வீசிவிட்டு நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரது உடலியும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் யார் அந்த மர்ம நபர் என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், மூதாட்டிகளை கொலை செய்தது சேலம் மாவட்டம் காமலாபுரத்தை சேர்ந்த அய்யனார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் பதுங்கியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக அங்கு சென்ற மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகுமுத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளியை சுற்றி வளைத்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/5-2025-11-07-18-04-49.jpg)
அப்போது அய்யனார் உதவி ஆய்வாளர் கண்ணனின் வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயிற்சித்துள்ளார். அதனால் தற்காப்பிற்காக போலீசார் அய்யனாரின் வலது காலில் சுட்டு பிடித்தனர். பின்னர் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அய்யனாரை மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
நகைக்காக இரு மூதாட்டிகளை கொன்றவரை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us