கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் சுற்றுலா பேருந்து மூலம் 53 மாணவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தின் அருகே வந்தபோது ஓட்டுனருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தனியார் சுற்றுலா பேருந்து ஓட்டுனர் விருத்தாசலம் அருகே சேப்ளாநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தினகரன் (36) படுகாயமுற்றார். பேருந்தில் வந்த மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து ஓட்டுநர் தினகரனை அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுநர் மரம் அல்லாமல் அருகே உள்ள வாய்க்காலில் பேருந்தை விட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இதில் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் ஓட்டுநர் நெஞ்சு வலியிலும் காப்பாற்றியுள்ளார் என அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/4-2025-11-08-17-56-19.jpg)