தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நேற்று முன்தினம் (05-12-25) இரவு மாற்றுத்திறனாளியான சங்கரலிங்கம் என்பவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது உறவினர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதில் சங்கரலிங்கம் உயிரிழந்த நிலையில் மனைவி சுப்புத்தாய் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக உறவினர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரது மனைவி சுப்புத்தாய், இருவரும் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் மருத்துவமனைக்கு சென்று விட்டு பச்சரிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஊருக்கு அருகே உள்ள பாலத்தில் மறைந்திருந்த நபர்கள், அவர்களை அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே சங்கரலிங்கம் உயிரிழந்த நிலையில் வெட்டுப்பட்ட மனைவி சுப்புத்தாய் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்பு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம்? என்ன என்ற முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக உறவினர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக தெரியவந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/07/maat1-2025-12-07-20-10-02.jpg)
இந்நிலையில் நேற்று (06-12-25) காலை சங்கரலிங்கத்தின் அம்மா அழகுநாச்சி மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில் சொத்து தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது உறவினர்களான அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல், ராமர், மாரியப்பன், உள்ளிட்ட 11பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/07/maat-2025-12-07-20-09-42.jpg)