நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தநிலையில் சென்னை பாடி பகுதியில் உள்ள பிரபல துணிக்கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தீபாவளி ஆடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் பாடி பகுதியில் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து காவலர்கள் இல்லை என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சூழலில் நெரிசலில் சிக்கியுள்ள பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க முடியாமல் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வது போன்ற நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.