மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று மாலை 03:30 மணி அளவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி உள்ளிட்ட மதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அங்கீகாரம் பெறுவோம்!!! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் வெளியே 65 அடி உயர கொடி கம்பத்தில் மதிமுக கொடி ஏற்றப்பட்டது. பிறகு நுழைவு வாயில் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. அத்தோடு மதிமுக கொள்கை வீரர்களின் புகைப்பட கண்காட்சி பார்வையிடப்பட்டது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநாட்டின் நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் மாநாட்டிற்கு வருகை தரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களினால் திருச்சி சுற்றுவட்டாரத்தில் 15 கிலோ மீட்டர் அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.