Tourists flock to Courtallam Photograph: (kutralam)
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூரியனை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகப்படியான மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்றுலாத்தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதங்களில் பருவமழை காரணமாக குற்றாலத்தில் குளிக்க பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீராக நீர்வரத்து இருப்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர்.
Follow Us