சேலத்தில் இருந்து வளகாப்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் ஒன்று கூடி தனியார் டூரிஸ்ட் வேனில் இன்று (02.01.2025) பொள்ளாச்சிக்குச் சென்றுகொண்டிருந்தனர். அந்த வேன், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் அருகே உள்ள வாய்ப்பாடி பிரிவு, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்தது.
அப்போது, லாரியை முந்தி செல்வதற்காக வேன் ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அச்சமயத்தில் வேன் எதிர்பாராதவிதமாக லாரியில் உரசியது. அதில், நிலை தடுமாறிய வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த 15 பேரில், 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Follow Us