சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் மலபுரத்திற்கு டன் கணக்கில் ஜெலட்டின் குச்சிகள் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மதுக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் மலப்புரம் நோக்கிச் சென்ற சிறிய லோடு வேனை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் சுமார் இரண்டு டன் அளவு எடை கொண்ட 15,000 எண்ணிக்கை அளவிலான ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்தை ஓட்டி வந்த சுபேர் என்பவரிடம் தீவிரவாத தடுப்பு போலீசார் மதுக்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுவதற்காக ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்