tomorrow holiday at schools and colleges in chennai, thiruvallur and chengalpattu for red alert
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், தற்போது சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுயுள்ளது. மேலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 140 கி,மீ தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே 160 கிம் தொலைவிலும் தாழ்வு மண்டலம் நிலவியுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (01-12-25) மாலை திடீரென ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்த நிலையில், இன்று மாலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 20 செ.மீக்கு மேல் மழையும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருவதால் நாளை (02-12-25) சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (02-11-25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow Us