Advertisment

வரைவு வாக்காளர் பட்டியல் சர்பார்த்தல்; முதல்வர் தலைமையில் திமுக ஆலோசனை

16 (34)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (19.12.2025) வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் எஸ்.ஐ.ஆருக்கு முன்னதாக  6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இப்போது 5.43 கோடியாக குறைந்துள்ளனர். இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(21.12.2025) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் இக்கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக மாலை 6 மணிக்கு நடக்கும் என்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சர்பார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். 

Advertisment

அதோடு கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து கூட்டம் நடைபெறுவதால் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  

dmk DMK MK STALIN SIR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe