'Today we will resolve to rescue Tamil Nadu from the clutches of the family' - Edappadi Palaniswami Photograph: (admk)
செப்டம்பர் 15 இன்று திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்த தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,' தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா! அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!
இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைக்க முடியுமா? நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா? என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில் தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!
அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது. குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,
குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். அண்ணா நாமம் வாழ்க' என தெரிவித்துள்ளார்.