குளிர்கால மாதங்கள் ஆரம்பித்திருக்கும் நிலையில் வரும் 24ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் உறை பனி எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 29°செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Follow Us