Advertisment

மூட்டை மூட்டையாக கடத்தல் பீடி இலைகள்; வாரிச் சுருட்டிய க்யூ பிரிவு!

Untitled-1

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட. திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் (படகு பழுதுபார்க்கும் இடம்) இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரி உதவி ஆய்வாளர், ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார் இசக்கி முத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்தனர்.

Advertisment

2

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு இலங்கை கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பிடி இலைகள் கைப்பற்றினர். அதேசமயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுடன் கடத்தல் காரர்கள் தப்பி ஓடி விட்டார்கள். மேற்படி கைப்பற்றபட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கபட உள்ளது. கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe