கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற குருப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08-02-26) காலை தேர்வு நடைபெற இருந்தது. அப்போது, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 9 மணியைக் கடந்தும் வினாத்தாள் வரவில்லை எனப் புகார் எழுந்தது.

Advertisment

இதனால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரும்பாக்கம், நந்தனம் ஆகிய பகுதிகளில் குருப் 2 தேர்வின் போது குளறுபடி ஏற்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முகசுந்தரம் பிறப்பித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த குரூப் 2 தேர்வு தொழிநுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் குரூப்2 தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற இது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.