கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர்மட்ட மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்திற்குக் கோவையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் பெயரைச் சூட்டுவதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

Advertisment

இத்தகைய சூழலில்தான் இந்த மேம்பாலத்தைத் திறந்து வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (09.10.2025) காலை கோவை வந்திருந்தார். அதாவது காலை 09:30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அதன் பின்னர் கொடிசியாவில் நடைபெற்று வரும் ஸ்டார்ட் அப் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். அதன்பின்னர் 11.40 மணியளவில் கோல்டுவின்ஸ் சென்று மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். 

Advertisment

அப்போது ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் எனப் பலரும் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை வருகையையொட்டி கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்காக சுமார் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.