Advertisment

“தமிழ்நாடு பெருமை கொள்கிறது” - கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுக்கு முதல்வர் வாழ்த்து!

mks-supriya-sahu-ias

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ என்ற விருதை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பெற்றுள்ளார். இயற்கைப் பாதுகாப்பில் அவர் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்நிலையில் விருது பெற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுப்ரியா சாகு-க்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐக்கிய நாடுகள் சபையின்  சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அமைப்பின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் (Champions Of The Earth) விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு-க்கு எனது பாராட்டுகள்!

Advertisment

ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், நெகிழி (Plastic)பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்” எனப் பாராட்டியுள்ளார்.  மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஐ.நா. சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் (Champions of Earth) எனும் விருதினை பெற தேர்வாகியுள்ள தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

thangam-thennarasu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்களின் வாயிலாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர விளைவுகளை மட்டுப்படுத்த அவர் எடுத்து வரும் சிறந்த முன்னெடுப்புகளை பாராட்டும் விதமாக விதமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Award Environmental mk stalin Thangam Thennarasu united nations Supriya Sahu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe