தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு  நெல் கொள்முதல் செய்வதில் புதிய சாதனைகள் படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாடுபட்டு உழைத்து விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்புடன் சேமித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சிக்காலத்தை விடக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.

Advertisment

விவசாயிகளிடம் முந்தைய ஆட்சிக் காலத்தில் 2016-2017 முதல் 2020-2021 4 ஆண்டுகளிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 இலட்சத்து 51 ஆயிரத்து 469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் மட்டுமே. அதே நேரத்தில், விவசாயிகளுக்கு நன்மை செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 ஆட்சிப்பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிற்குப்பின் 2024 - 2025 ஆண்டு வரை ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மொத்தம் 1 கோடியே 70 இலட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் ஆகும். 

Advertisment

முந்தைய ஆட்சிக் காலத்தில் சராசரியாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ஆண்டுக்கு 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன். ஆனால் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆண்டுக்கு, சராசரியாக கொள்முதல் செய்துள்ள நெல் 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் ஆகும். அதாவது முந்தைய ஆட்சியைவிட திராவிட மாடல் அரசு 19 இலட்சத்து 91 ஆயிரத்து 93 மெட்ரிக் டன் கூடுதலாகக் கொள்முதல் செய்துள்ளது. இந்தச் சாதனை ஒன்றே விவசாயிகளிடம்  முதலமைச்சர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை நாட்டிற்கு வெளிப்படுத்தும் உறுதியான சான்றாகும்.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக கொள்முதல் நடைபெறும் 13 மாவட்டங்களில் கூடுதலாக 127 POP இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிக நெல் வரத்து இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 5,510.4 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

57.63.203 டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக சாக்குகளும், 58 மெ.டன் சணல்களும், (15, 204 + 13.652) 28,856 பிளாஸ்டிக் தார்ப்பாய்களும் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 2.65 கோடி சாக்குகள் இருப்பில் உள்ளன. தற்சமயம் திருவாரூரில் அதிக நெல் இருப்பு உள்ளதால் அதனை நகர்வு செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாரியாக பொறுப்பு அளித்து கூடுதலாக 2 பொது மேலாளர்கள், 64 கண்காணிப்பாளர்கள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 4000 லாரிகள் மூலமாகவும். 13 முதல் 15 இரயில்கள் மூலமாகவும் நெல்கள் பாதுகாப்பாக கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் திட்டமிட்டு நகர்வு செய்யப்படுகிறது. 100 சுமை தூக்கும் பணியாளர்கள் 21.10.2025 முதல் கூடுதலாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 மண்டல மேலாளர்கள் குழு ஒரு கூடுதல் பதிவாளர் ஆகியோர் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.