தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2003க்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு புதிய ஓய்வு ஊதியம் திட்டம் அமலில் உள்ளது. இவர்களில் சில ஓய்வு பெற்றவர்களும் ஓய்வூதியம் இல்லாமல் பொருளாதார சிரமங்களை அனுபவித்து வந்தனர். 

Advertisment

22 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் வழங்கவேண்டி தொடர்ந்து போராடி வந்தனர். ஆட்சிகள் மாறினாலும் ஓய்வூதியம் மீட்டும் கிடைக்கவில்லை. அதனா, பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். தமிழகம் முழுவதும் இதுவே பேசுபொருளாக இருந்து வந்தது. பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில்,  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பென்ஷன் வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, மூன்று பேர் கொண்ட அமைச்சர் குழுவிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதனை தமிழக முதல்வரும் கருணையோடு பரிசீலித்ததைத் தொடர்ந்து,  இன்று 03.01.2026 தமிழ்நாடு அரசு சார்பாக ஓய்வூதிய ஆணையத்தை உருவாக்கி,  அதன் மூலம் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியமும் அதன் உள்ளீட்டு பணபலன்களும் வழங்க ஆணையிட்டு உள்ளார்கள்.  

Advertisment

இந்தியாவில் மற்ற மாநில அரசுகளுக்கு இது ஒரு முன்னோடியான திட்டமாக அமைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மகிழ்ச்சியை நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றக்கூடிய பொறியாளர்களும் சாலை ஆய்வாளர்களும் பகிர்ந்து வருகின்றனர். அறிக்கை வாயிலாக அமைச்சர்களுக்கும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும், போராடிய சங்கத்  தலைவர்களுக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள்  சங்கத்தின் சார்பாக, பொதுச்செயலாளர் மு. மாரிமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.