நம் நாட்டில் கருவில் இருக்கும் குழந்தையின் (சிசு) பாலினத்தை வெளியில் தெரியப்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னை தலைமைச் செயலகத்தில் கருவின் பாலின தேர்வைத் தடை செய்தல் தொடர்பான சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மாநில மேற்பார்வை குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேலும், துறைச் செயலர் செந்தில் குமார் உட்படப் பல உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தையடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பதிவுபெற்ற 1,727 அரசு மற்றும் 7,343 தனியார் என 9070 ஸ்கேன் மையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக ஸ்கேன் மையங்கள் அமைப்பதற்கு அனுமதி கோரி 1747 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 1608 மையங்களுக்குமட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் தொடர்பாக சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கருவின் பாலின தேர்வைத் தடை செய்தல் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக 15 ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான, அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 2021-22ஆம் ஆண்டில் 934 ஆக இருந்த பாலின விகிதம் 2025-26ஆம் 941ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்று ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தை வெளியில் தெரியப்படுத்தும் இந்தியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/tn-sec-2026-02-05-09-34-50.jpg)