“தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதி” - தமிழக அரசு உத்தரவு!

stray-dog-tn-govt

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தெரு நாய்க்கடி தொல்லையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் இந்த தெருநாய்கள் குழந்தைகள் மற்றும் பொது மக்களைக் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாகச் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதன் உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மோசமாகக் காயமடைந்து நோய் வாய்ப்பட்டு தெருவில் சுற்றி வரும் தெரு நாய்களைக் கருணை கொலை செய்யத் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அனுமதி அனுமதி அளித்துள்ளது. அதன்படி இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசானது வெளியிட்டுள்ளது. அதில், “தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய்ப் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் உள்ள தெரு நாய்கள் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். 

கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்”என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழக்கக்கூடிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு சாலைகளில் சுற்றித்  திரியும் ஆடு, மாடு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகள் விலங்குகளைக் கட்டுப்படுவது தொடர்பான கொள்கையும் தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இது போன்று விலங்குகளைச் சாலையில் திரிய விடக்கூடாது என்பதற்காக  உரிமையாளர்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிப்பது போன்ற கொள்கை முடிவைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

order permission Stray dog tn govt
இதையும் படியுங்கள்
Subscribe