தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை முறைகேடாக ஒப்பந்தம் விடுத்து, ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் பண மோசடியில் ஈடுபடுகின்றனர் எனக் குற்ற்ச்சாட்டு எழுந்தது. அரசின் விதிகளை மீறி மணல் அள்ளப்படுகிறது எனக் கூறப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை பல மாவட்டங்களில் ரெய்டு நடத்தியது. அதோடு, மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் அலுவலகம், வீடு மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதில், “மணல் குவாரியில் முறைகேடு நடந்ததற்கான எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை” என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு அமலாக்​கத் துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரமேஷ், “சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்ற தடை சட்​டத்​தில் அதற்​கான அனு​மதி அமலாக்​கத்துறைக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது” என வாதிட்​டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள், ஒப்பந்ததாரர்கள் உட்பட அனைவரும், விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனவும், தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மனு அளித்திருந்தது குறித்து கடுமையான கண்டங்களைத் தெரிவித்திருந்தது. சம்மனுக்கு எதிராக ரிட் மனு அளிப்பதாக இருந்தால் ஆட்சியர்கள் அல்லது சம்பந்தப்பட்ட நபர்கள் தான் மனு அளித்திருக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/tn-sec-2026-01-08-23-14-56.jpg)
இவ்வாறாகப் பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த வழக்கினை தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகவும், வழக்குகளைப் பதிவு செய்யும் விதமும் வரம்புகளை மீறும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்யத் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Follow Us