கடவுள் ராமர் ஒரு முஸ்லிம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருபவர் மதன் மித்ரா. இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “கடவுள் ராமர் ஒரு முஸ்லிம், இந்து அல்ல. அவருக்கு குடும்பப் பெயர் இல்லை” என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோவை மேற்கு வங்க பா.ஜ.க தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்துள்ளது.
அந்த பதிவில் பா.ஜ.க தெரிவித்துள்ளதாவது, “திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால், இந்து கடவுள்களையும் இந்து நம்பிக்கைகளையும் அவமதிக்காமல் இருக்க முடியாது. இப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா, ராமர் இந்து அல்ல, ஒரு முஸ்லிம் என்று கூறுகிறார். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வது வெறும் வார்த்தைப் பிரயோகம் அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் மிகவும் இந்து விரோத கட்சி” என்று தெரிவித்துள்ளது.
மதன் மித்ராவின் பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், அது ஏஐ வீடியோ என்று மதன் மித்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இது 2024 ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய வீடியோ. அவர்கள் அதைத் திருத்தி இப்போது வெளியிட்டுள்ளனர். அவர்கள் முழு வீடியோவையும் காட்டவில்லை. அவர்கள் அதை வெளியிட்டால், நான் இப்படி எதுவும் சொல்லவில்லை என்பதை அவர்கள் பார்ப்பார்கள். இது முற்றிலும் ஏஐயால் உருவாக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வீடியோ” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/tmcmla-2025-12-19-10-19-51.jpg)