திருப்பூரில் வீரராகவ பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா நேற்று (30.12.2025) கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு நபர் அங்கு வந்த பொது மக்களிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த தலைமைக்காவலர் ஒருவர், அவரை இவ்வாறு பேசக்கூடாது என்று எச்சரித்ததனால், அந்த நபர் தலைமைக்காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Advertisment

அப்போது சுதாரித்துக்கொண்ட கொண்டக் காவலர், அந்த நபரிடமிருந்து தன்னை தற்காத்துக் கொண்டார். அந்த நபரை கைது செய்த காவல்துறை, இந்த சம்பவம் குறித்து அவரைக் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், "பெருமாள் கோயிலில் திருவிழாவின் போது காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த நபர் ஒருவர் தலைமைக்காவலரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அவரைக் காவலர்கள் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்த விசாரணையில் சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவரைப்போல அவர் நடந்து கொண்டார். 

Advertisment

எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. இருப்பினும் இன்னும் இரு நாட்கள் கழித்து தான் முழுமையான தகவல் தெரியவரும் என்று கூறியுள்ளதால், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வருகிறார், அவர்  ஏற்கனவே 2020ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறை சென்றவர்” என்றும் தெரிவித்தார். மேலும் போதைப்பொருட்கள் குறித்து பேசுகையில் " திருப்பூரில் இந்த ஆண்டு மட்டும் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

inves

230 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெராயின் உள்ளிட்ட உயர்ரக  போதைப்பொருட்கள் மிக குறைந்த அளவில் (33கி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை போதைப்பொருள் விற்றதற்காக 21 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது,  4300 கிலோ புகையிலை பிருட்கள் பிடிபட்டுள்ளது. 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4  நன்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றும் கூறினார்.

Advertisment