கனமழை காரணமாகத் திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (09.08.2025) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதோடு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இத்தகைய சூழலில் திருப்பத்தூரில் தான் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாகத் திருப்பத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (09.08.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்திரவல்லி பிறப்பித்துள்ளார்.