அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பதி லட்டில் கலப்பட நெய் இருப்பதாக எழுந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தின் இறுதி குற்றப்பத்திரிக்கையானது நெல்லூர் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த விவகாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதில் 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 65 லட்சம் கிலோ நெய் போன்ற போலி நெய் சப்ளை செய்யப்பட்டுள்ளது. 2014-24 இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு கொடியே 68 லட்சம் கிலோ நெய் கொண்டு 48 கோடியே 76 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட ஒரு கொடியே 68 லட்சம் கிலோ நெய்யில் 68 லட்சம் கிலோ நெய் போலி என்பது தெரியவந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி 20 கோடி லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisment

லட்டு மோசடி நடந்த காலகட்டத்தில் உத்திரகாண்ட்டை சேர்ந்த போலே பாபா என்ற நிறுவனம் நெய் கொடுத்துள்ளது. பால் பொருட்களை வாங்காமல் கர்னல் எண்ணெய், பாமாயில் மற்றும் ஆய்வில் போலி என தெரிய வாராமல் இருக்க சில ரசாயனங்களை போலே பாபா நிறுவனம் அதில் சேர்த்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த அஜய்குமார் சுகந்த் என்பவர் நெய் போலவே சுவை, மணம் கொண்ட எசன்ஸுகளை போலே பாபா நிறுவனத்திற்கு கொடுத்தது தெரியவந்துள்ளது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் சிலரும் போலி நெய்யை அனுமதிக்க லஞ்சம் பெற்றிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது.