ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த சம்பவம், பொதுமக்களை திடுக்கிட வைத்துள்ளது.சர்ச் சந்திப்பு அருகே உள்ள பேருந்து நிழற்குடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் டயர்களை நகராட்சி அதிகாரிகள் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

Advertisment

மதுரை–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், ராஜபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட இந்த நிழற்குடை, பேருந்துகள் முறையாக நின்று பயணிகளை ஏற்றி இறக்காததால் நீண்ட காலமாக பயன்பாடின்றி இருந்தது. இதனால் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் உள்ளிட்டோர் அந்த இடத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர். இங்கு திடீரென வந்த நகராட்சி அதிகாரிகள், நிழற்குடையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் டயர்களை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டிச் சேதப்படுத்தினர்.

Advertisment

மேலும், இனி அங்கு வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என கடும் எச்சரிக்கையும் விடுத்துச் சென்றனர். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், பொதுமக்களின் சொத்துகளைச் சேதப்படுத்திய இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. “ஒழுங்கு நடவடிக்கையா, அதிகார அத்துமீறலா?” என ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் குமுறுகின்றனர்.