திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த அக்டோபர் 2005 மாதத்தில் புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்கு கோப்புகளை காலாண்டு ஆய்விற்காக பரிசீலனை செய்த பொழுது பார்வையில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தபட்டுள்ளார். அதனால் சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும் அக்குழந்தை சிறுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்று கைவிடப்பட்டு பின்னர் குழந்தைகள் நலக்குழுவின் ஒப்படைவு பத்திரம் எழுதி கொடுத்துள்ளதாகவும் சிறுமிக்கு பாலியல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்திய நபர்கள் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் இருப்பது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியிடம் உரிய விசாரணை மேற்கொண்டு சிறுமிக்கு பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திட அறிவுறுத்தபட்டதன் அடிப்படையில் கடந்த 03.01.2020-ம் தேதி திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் திருச்சி தென்னூரைச் சேர்ந்த 15வயது சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமி தற்போது பெற்றோருடன் கரூர் மாவட்டம் செல்லிபானையம் மனவாலி கிராமத்தில் வசித்து வருவதாகவும், கடந்த 2021 ம் ஆண்டு 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது திருச்சி தென்னூர் ஆப்பக்காரத்தெருவில் குடியிருந்து வந்ததாகவும் அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது பரமத்தி வேலூரில் உள்ள தனது தாத்தாவின் இரண்டாவது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்வதற்காக தாத்தா தன்னுடைய பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அப்போது சிறுமி ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பாடு வாங்க சென்று வரும் போது அங்கு வேலை செய்யும் சப்ளையர் ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் மேற்படி ரவியை பாட்டிக்கும் தெரியும் என்றும் சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாத போது ரவி சிறுமியுடன் பல முறை பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும் அதை பாட்டியிடம் சொன்னபோது பாட்டி கண்டு கொள்ளவில்லை என்று கூறினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/10/k-2026-01-10-14-07-11.jpg)
மேலும் சிறுமி 7 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரது அம்மா வேலைக்கு சென்ற பின் தனது பின்னால் வேலை செய்ய வந்த நொண்டி தாத்தா சிறுமியின் வீட்டில் வைத்து சிறுமியிடம் மூன்று முறை பாலியல் தாக்குதல் செய்ததாகவும் பின்னர் சிறுமியின் தாத்தா வனராஜீம் அவரது தம்பி காளை (திருச்சி 27வது வார்டு திமுக வட்ட செயலாளர்) ஆகியோர் திருச்சி தென்னூரில் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு அம்மா அடிக்கடி தன்னிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் சாப்பாடு கொடுக்க சென்றிருந்த போது சிறுமியின் சின்ன தாத்தா காளை மற்றும் அவருடைய நண்பர்கள் செல்வராஜ், சரண்ராஜ் குமார். மோகன்ராஜ், சரவணன் மற்றும் சந்திரன் ஆகியோர் அவருடைய வீட்டில் வைத்து சிறுமியிடம் பல முறை பாலியல் தாக்குதல் செய்ததாகவும் சிறுமியின் தாய்மாமா திருச்சி தென்னூரை சேர்ந்து மணிகண்டன் அவரது வீட்டில் வைத்து பாலியல் தாக்குதல் செய்ததாகவும் சிறுமியின் அப்பாவின் அக்கா வீட்டிற்கு சென்றிருந்த போது அவரது மகன் அஸ்வின் கரூர் நீல மேட்டில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சிறுமியிடம் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், மேலும் கரூர், நீலிமேடு, கோவில் திருவிழாவிற்கு மைக் செட் கட்ட வந்திருந்த கவின் என்பவர் அங்கிருந்த சீட் போட்ட கூடத்தில் வைத்து பாலியல் தாக்குதல் செய்ததாகவும், சில நாட்கள் சென்ற பிறகு சிறுமிக்கு வயிறு பெரியதாக இருந்ததால் சிறுமியின் அம்மா சிறுமியை திருச்சி ஜெனட் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னதாகவும் சிறுமியும் அவரது தாயாரும் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த 14.08.2003 ம் தேதி சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் திருச்சி ஜெனட் மருத்துவமனையில் சேர்ந்து அன்று இரவே ஆண் குழந்தை பிறந்ததாகவும் மேற்படி மருத்துவமனையில் குழந்தையை விட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் சிறுமியும் அவரது அம்மாவும் கருருக்கு சென்றுவிட்டதாகவும், பின்னர் 5 நாட்கள் கழித்து போலிசார் வந்து கரூரிலிருந்து சிறுமியை அழைத்து வந்து குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர் செய்ததாகவும் குழுமத்தில் விசாரித்துவிட்டு சிறுமியை திருச்சி TM33 சொந்தம் வரவேற்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 2025 ம் வருடம் ஜனவரி மாதத்தில் சிறுமி தனது அம்மாவுடன் கரூரில் தங்கியிருந்த போது தனது அம்மாவிற்கு தெரிந்த கரூர் வெடிமருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் செல்லத்துரை என்பவர் சிறுமியுடன் பழகி வந்ததாகவும் அப்போது சிறுமியை செல்லதுரை என்பவர் உப்படமங்களம் லிங்கத்தூர் காட்டுப்பகுதியல் வைத்து பாலியல் தாக்குதல் செய்ததாக சிறுமி விசாரணையில் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி அவரது அம்மா சாந்தஷீலா மற்றும் அவரது தாத்தா வளராஜ் ஆகியோரிடம் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகு அதிகாரிய ராகுல் காந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் தற்போது திருச்சி மாவட்டத்தில் பூதாகரமாகி பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. மேலும் பாதிப்பு ஏற்படுத்திய நபர்களில் ஒருவரான காளை என்பவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/aa-2026-01-10-14-17-25.jpg)