கடலூரில் திருவிழாவுக்கு வந்திருந்த நண்பர்கள் டீ குடிக்க காரில் சென்று பொழுது அதிவேகமாகச் சென்ற கார் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் எருமனூரில் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த இளைஞர்கள் சிலர் தேநீர் அருந்தலாம் என காரில் சென்றுள்ளனர். காரில் ஆறு இளைஞர்கள் வேகமாக சென்ற நிலையில் விருத்தாசலம் அருகே நோக்கிச்சென்று கொண்டிருந்த பொழுது மணவாளநல்லூர் அருகே திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் ஆதினேஷ், வேலு, ஐயப்பன் ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.