தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப் பெரியாறு கரையில் இரு பெண்களை வன்கொடுமை முயன்றதாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நேற்று முன்தினம் இரவு, சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும், மசாஜ் சென்டரில் வேலை செய்யும் இவர்கள், தங்கள் ஆண் நண்பருடன் முல்லைப் பெரியாறு கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீரபாண்டியைச் சேர்ந்த சந்திரனின் மகன் விக்னேஷ் (23), பாண்டியின் மகன் குணால் (25), உதயகுமாரின் மகன் ஹரிஹரன் (21) ஆகிய மூவரும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தனர்.

Advertisment

மதுபோதையில் இருந்த மூவரும் ஆண் நண்பரைத் தாக்கி விரட்டியடித்து, இரு பெண்களைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். இதில் ஒரு பெண் தப்பி ஓடி, அருகிலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வீரபாண்டி போலீசார் மற்றொரு பெண்ணை மீட்டனர்.பின்னர், மூன்று இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக  விசாரணை நடைபெற்று வருகிறது.