Advertisment

கர்நாடக மது பாக்கெட்; வீட்டில் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது!

Per

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கர்நாடகா மது பாக்கெட் விற்பனை நடைபெற்று வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகார்கள் கூறியும் அவர்கள் கண்டுக்கொள்ளாமலே இருந்தனர். இந்நிலையில் அரசு மதுபான கடையில் விற்பனை குறைந்து வந்துள்ளன. இது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது, கர்நாடகா மது பாக்கெட்டிகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது என கூறினர். 

Advertisment

இது உயரதிகாரிகள் வழியாக காவல்துறை எஸ்.பிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேரணாம்பட்டு போலீசாரிடம் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில்,  போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டனர். அதில் பேரணாம்பட்டு அடுத்த ஜெ ஜெ நகர், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை ஈடுபட்டபோது அந்த பகுதியில் கர்நாடகா மது பாக்கெட் விற்பனையில் ஈடுபட்ட கோபி, சுரேஷ், சிந்துமதி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கர்நாடகா மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து  மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisment

சட்டவிரோதமாக கர்நாடக மது பாக்கெட்டுகளைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்டு மூன்று பேர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PERANAMPATU police Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe