நகரின் வெவ்வேறு பகுதிகளில் வெறி நாய் கடித்து சிறுவன், இரு சிறுமிகள் உட்பட 3 பேர்  சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் வெறி நாய்க்கடி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Advertisment

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்ட கூட்டமாக சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் இளைஞர்கள் சிறுவர்களை அவ்வப்போது துரத்தி கடித்து அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று (29.01.2026) மாலை பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியை சேர்ந்த தபஸ்சீர் (14) குப்பைமேடு பகுதியை சேர்ந்த சாயிரா (6) மற்றும் உம்மே ஹானி(6) உள்ளிட்ட 1சிறுவன் 2சிறுமி உட்பட 3 பேர் மீது தெரு நாய்கள் கை, கால், முதுகு முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடித்து படுகாயம் அடைந்தனர். 

Advertisment

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பேர்ணாம்பட்டு நகரில்  சுற்றித் திரியும் தெருநாய்கள் இளைஞர் சிறுவர் சிறுமிகள் என ஏராளமான நபர்கள் கடித்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் நகர பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.