கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி குழந்தைகள் உட்பட 41 பேர் மரணமடைந்தனர். இந்த துயர சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்.. த.வெ.க. தலைவர், பொதுச் செயலாளர் முதல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே ஒரு மாதத்திற்கும் மேலாக ‘எஸ்கேப்பான சம்பவம்.. பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Advertisment

இந்த விவகாரத்தை கையாண்ட நக்கீரன் ஆசிரியர், கரூரில் நடந்த கொடூர சம்பவத்திற்கு நடிகரும்  தவெக தலைவருமான விஜய் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என தொடர்ந்து பேசி.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதோடு, சமீபத்தில் கோவையில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர்.. மூன்று கொடூரன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நக்கீரன் ஆசிரியர், குற்றவாளிகளை சுடாமல் விட்டது தவறு எனக்கூறி பெண்களுக்கு எதிரான குற்றங்களை பட்டியலிட்டு ஆவேசமாக பேசினார்.

Advertisment

இந்த சூழலில், நக்கீரன் ஆசிரியர் பேசிய இத்தகைய வீடியோக்கள் பல லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்ததை அடுத்து.. அது சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் நீட்சியாக, யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் நக்கீரன் ஆசிரியர் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவான வகையில் விமர்சித்து பேசி இருந்தனர். எல்லைமீறிய இத்தகைய பொய்யான அவதூறு வீடியோக்கள் மக்கள் மத்தியில் பரவிய நிலையில், நக்கீரன் மீது அக்கறை கொண்டவர்கள் இதனை நக்கீரன் ஆசிரியர் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர். இதையடுத்து, அவதூறு கருத்துக்களை வெளியிட்ட நபர்கள் மீது நக்கீரன் சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு இடையூர் செய்வது. பொதுவெளியில் பொய்யான வதந்தியை பரப்புவது, தொழில்நுட்ப ரீதியாக ஆபாசமாக பேசுவது, பெண்களை துன்புறுத்துவது போன்ற 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து.. போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த விவகாரத்தில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த விஷ்ணு வரதன் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியான திருவேற்காட்டை சேர்ந்த ஸ்ரீகுமரன், பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக  பேசிய மதுரையை சேர்ந்த  நாக யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பிறகு.. மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment