Advertisment

காரில் சென்ற கல்லூரி மாணவர்கள்: அதிகாலையில் நடந்த கோரம் – அதிரவைக்கும் சம்பவம்!

4

கோயம்புத்தூர் பி.என். புதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 23 வயதான சாரூபன், புதுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ராகுல் செபஸ்டியான், திருப்பத்தூர் மந்தைவெளி குறும்பேரியைச் சேர்ந்த 23 வயதான முகிலன், தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த 23 வயதான கிறிஸ்டி குமார் மற்றும் சரண் ஆகிய ஐந்து பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர்களாகப் பயின்று வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் ஐந்து மாணவர்களும் ஒரு சொகுசு காரில் புதிய துறைமுகக் கடற்கரைக்குச் சென்றனர். காரை சாரூபன் ஓட்டிச் சென்றார். கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், பீச் ரோடு பகுதியில் சென்றபோது கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேம்ப மரத்தில் பயங்கரமாக மோதியது. கார் அப்பளம் போல் நொறுங்கியது.

Advertisment

5

இதில் சாரூபன், ராகுல் செபஸ்டியான், முகிலன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கிறிஸ்டி குமார், சரண் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.விபத்து குறித்து அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மீட்புப் படையினர் விரைந்து சென்று காரில் சிக்கியிருந்த கிறிஸ்டி குமார், சரண் ஆகியோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தை தூத்துக்குடி டவுன் ஏ.எஸ்.பி. மதன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

car accident College students police Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe