சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர்ப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இதை பதுக்கி வைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரகசியமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது.

Advertisment

அதன் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் குப்புசாமி, காவலர்கள் ரமணி, மணிகண்டன் அய்யப்பன், சிவா, நாராயணன்,சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிவபுரி சாலையில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த கோவிந்தசாமி நகரை சேர்ந்த கௌதம் (25), வல்லத்துறை கிராமம் ஜெயக்குமார் (30), வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த நவீன் (25) ஆகியோரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment