சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று அதிகாலை மாவட்ட ஆட்சியரின் மின் அஞ்சலுக்கு மிரட்டல் வந்ததாகவும் அதன் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

இது வதந்தி என கூறப்படும் நிலையில் இது குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டி மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment