அண்மை காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அனைத்து புரளிகள் என்பது தெரியவந்தது. இருப்பினும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் மோப்பநாய் உதவியுடனும், நிபுணர்களுடனும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அதே போல், சென்னை தி.நகர் திலக் பகுதியில் உள்ள பா.ம.க அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.