52 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் தனியார் ஷூ நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், 52 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 8 கி.மீ சுற்றளவில் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் இந்த முகாமில் பங்கேற்குமாறு அந்த நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு பணிக்கான முகாம் இன்று நடைபெற்றது. ஆனால், வேலைவாய்ப்புக்காக அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த முகாமில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெண்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படும் என்று கம்பெனி நிர்வாகம் அறிவித்த பிறகு, பலரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/51-2025-11-21-18-47-55.jpg)