விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எஸ்.ஐ.ஆரை எதிர்த்து சென்னை எழும்பூரில் இன்று (24.11.2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (19.11.2025) சந்தித்துப் பேசினார். அதில், “அம்பேத்கரின் கனவு என்ன? இதை தெரிந்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் கனவை புரிந்து கொள்ள முடியும். அம்பேத்கர் கண்ட கனவு இந்த மண்ணில் சாதிய மதவாத பாகுபாடுகள் கூடாது என்பதாகும். பாலினத்தின் பெயரால் ஆணாதிக்கம் இங்கே மேலோங்க கூடாது என்பதாகும்.

Advertisment

ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு சமூக நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் அதிகாரம். அனைவருக்கும் வாழ்வாதாரம். அனைவருக்கும் வாழ்வுரிமை இவற்றையெல்லாம் உறுதிப்படுத்த வேண்டுமானால் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் இங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கிற பாகுபாடுகளை முற்றாக அழித்தொழிக்க வேண்டும். இதுதான் அம்பேத்கரின் கனவு. இதுதான் அவருடைய தொலைநோக்கு பார்வை. இதுதான் அவர் விரும்பிய புதிய தேசம் (இந்தியா). 

Advertisment

இப்படிப்பட்ட ஒரு புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக கனவு கண்ட அம்பேத்கர், அல்லும் பகலும் கண் துஞ்சாமல் அயராது பாடுபட்டு உருவாக்கிய ஒரு மாபெரும் ஆயுதம்தான் இந்திய அரசமைப்புச் சட்டம். இந்திய அரசமைப்பு சட்டம் ஒன்றுதான் இன்றைக்கு நம்மை பேச அனுமதிக்கிறது. செயல்பட அனுமதிக்கிறது. உரிமை குரல் எழுப்ப அனுமதிக்கிறது. போராட அனுமதிக்கிறது. எதிர்த்து வாதாட அனுமதிக்கிறது. கட்சிகளை உருவாக்கி கொள்ள அனுமதிக்கிறது. சங்கங்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஜனநாயகத்தை நமக்கு மிக மிகப்பெரும் ஆயுதமாக தருகிறது” எனப் பேசினார்.