அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் கூட்டாக முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்றது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைத்துள்ளதும் இன்று பேசு பொருளானது.

Advertisment

இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ''மனோஜ் பாண்டியன் பற்றி நீங்கள் கேள்வி கேட்டீர்கள். எல்லாம் நன்மைக்கே. செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியது அதிகாரத்தின் உச்சநிலை. இது அழிவுக்கு தான் வழிவகுக்கும்'' என்றார்.

Advertisment