Advertisment

“இந்த நிலைமை மாற வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

book-fair-1

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49வது சென்னை புத்தகக் காட்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08.01.2026) தொடங்கி வைத்தார். இதனையடுத்து முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை சுகுமாரன் (கவிதை), ஆதவன் தீட்சண்யா (சிறுகதை), இரா.முருகன் (நாவல்), பாரதிபுத்திரன் (உரைநடை), கே.எஸ்.கருணா பிரசாத் (நாடகம்), வ.கீதா (மொழிபெயர்ப்பு) ஆகியோருக்கு வழங்கினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “இன்றைக்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம், புத்தகங்களை படிக்க நிறைய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. மின்னூல்கள், கிண்டில் கருவி என்று நிறைய ஆப்ஷன்ஸ் வந்துவிட்டது. பல்வேறு இணைய நூலகங்களில் இருந்து, நம்மால் எளிதாக புத்தகங்களை டவுன்லோட் செய்ய முடியும். இத்தனை வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு புத்தகத்தை கையில் ஏந்தி, ஒவ்வொரு பக்கமாக புரட்டி படிக்கும் அனுபவமே தனி சுகம் தான். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும், புது வெளிச்சம் உண்டாகும். அந்த வெளிச்சத்தில் அறியாமை எனும் இருள் விலக வேண்டும்.

Advertisment

இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் தமிழும், தமிழ்நாடும் செழிக்க வேண்டும் என்றால், நீங்கள் வெற்றியாளர்களாக உயர வேண்டும் என்றால், புத்தகங்கள் எனும் அறிவாயுதங்களை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கு பூங்காக்கள், பயணங்கள் என்று பொது இடங்களில் நிறைய பேர் புத்தகங்களை படித்துகொண்டே செல்வதை பார்ப்பதுண்டு. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு அந்த நிலைமை இல்லை. இது மாற வேண்டும். உங்களின் சிந்தனைகள் வளர வளரத்தான் நம்முடைய தமிழினத்தின் வளர்ச்சி, மேல் நோக்கி போகும். போராடி போராடி இந்த நிலைமைக்கு உயர்ந்து வந்திருக்கிறோம். 

book-fair-2

இங்கிருந்து நாம் முன்னால்தான் செல்ல வேண்டும். யாரும் நம்மை வீழ்த்த அனுமதிக்க கூடாது. அதனால், தினமும் ஒருமணி நேரமாவது படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை புத்தகங்களில் செலவு செய்யுங்கள். புதிய எழுத்தாளர்கள் உருவாகி வாருங்கள். எழுத்துகளை படிக்க படிக்க எண்ணங்கள் வளரும் எண்ணங்களை எழுத்துகளாக படைக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் கை கொடுக்கும்” எனப் பேசினார். 

advice book fair chennai book fair mk stalin youngsters
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe